வாயை மூடிக் கொண்டிருங்கள் : மன்னிப்பு கோரினார் ரோஹிணி
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவை நேற்றைய தினம் வாயை மூடச் சொன்னதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன இன்று நாடாளுமன்றில் மன்னிப்பு கோரினார்.
சபாநாயகர் அந்த நேரத்தில் நடந்து கொண்ட விதம் காரணமாக நான் ஆக்ரோஷமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ரோஹினி கவிரத்ன கூறினார்.
சித்திரவதை கூடங்கள் இருந்தன..
அத்துடன், சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க தனது சிறப்புரிமைகளை மீறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன குற்றம் சுமத்தினார். "நான் ஒரு கொலைகாரனின் மகள் என்று சபைத் முதல்வர் கூறினார். என் தந்தை யாரையும் கொல்லவில்லை, ஆனால் மாத்தளை மாவட்ட மக்களுக்கு உயிர் கொடுத்தார்," என்று அவர் கூறினார்.

இருப்பினும், 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் போது பல சித்திரவதை கூடங்கள் இருந்ததை தாம் ஏற்றுக்கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri