இம்ரான் மஹ்ரூபின் சகோதரி மவ்பிம ஜனதா கட்சியில் போட்டி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபின் சகோதரியான றோஹினா மஹ்ரூப், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மவ்பிம ஜனதா கட்சியில் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்களில் ஒருவராக போட்டியிடவுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த இவர், தேர்தலின் பின் மவ்பிம ஜனதா கட்சியின் வேண்டுகோளுக்கு அமைய அக்கட்சியில் சேர்ந்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.
மவ்பிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர சிறந்த ஆளுமை மிக்க தலைவர் எனக் கூறும் இவர், கட்சியின் ஏனைய தலைவர்களும் தனது அரசியல் பயணத்திற்கு தரும் ஆதரவு திருப்தியானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

சேவைகளை தொடர்தல்
இக்கட்சியின் மூலம் தன் தொகுதியின் மக்களுக்கு தனது தந்தையான முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஈ.எச்.மஹ்ரூப் விட்டு சென்ற சேவைகளை தொடர்வதே தனது இலட்சியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினி செய்த காரியம், விஜயாவிற்கு பளார் விட சென்ற அண்ணாமலை... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட் Cineulagam
அண்ணாமலைக்கு தெரியவந்த வீட்டை அடமானம் வைத்த விஷயம், மனோஜிற்கு கொடுத்த தண்டனை... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan