இளம் பெண் ஒருவர் செய்த காரியம்! - வர்த்தகரின் சொகுசு கார் உள்ளிட்ட நகைகள் - வைரம் கொள்ளை
வர்த்தகர் ஒருவரை மயக்கமடையச் செய்த இளம் பெண் வாகனம் மற்றும் நகைகளைத் திருடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
கடுவெல பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரை மயக்கமடைய செய்து அவரது நகைகள் மற்றும் சொகுசு வாகனத்தை அபகரித்துக் கொண்டு இளம் பெண் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த வர்த்தகர் பெண்ணுடன் இங்கிரியவில் உள்ள ஹோட்டலுக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதன்பிறகு அந்த நபருக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கொடுத்துவிட்டு, அவரது நகைகள் மற்றும் வாகனத்துடன் குறித்த பெண் தப்பிச் சென்றுள்ளார்.
குறித்த பெண் வர்த்தகரிடம் இருந்து 25 பவுண் தங்கச் சங்கிலி, 06 பவுண் எடையுள்ள மாணிக்கக்கல் மோதிரம் மற்றும் 08 பவுண் நாணயம் என்பவற்றை திருடியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இங்கிரிய, அரக்கவில பிரதேசத்தில் குறித்த பெண் வாகனத்தை கைவிட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 1.9 மில்லியன் பணம் ஒரு சிறிய பையில் வைக்கப்பட்டு, வாகனத்தின் பின்புறம் உள்ள பயணப் பையில் வர்த்தகரின் ஆடைகள் இருந்தன.
இந்நிலையில், வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



