பாதுக்கையில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து நகை மற்றும் பணம் கொள்ளை
கொழும்பு (Colombo) - பாதுக்கை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் வாள்முனையில் நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் நேற்று (12.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
பாதுக்கை, மாவத்தகம பிரதேசத்தில் உள்ள கழிவு இரும்புகள் சேகரித்து விற்பனை செய்யும் வர்த்தக நிலையமொன்றிலேயே கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
சம்பவ தினமான நேற்று (12) மாலை வர்த்தக நடவடிக்கைகள் முடிவடைந்து வர்த்தக நிலையத்தை மூடுவதற்காகத் தயாரான போது, கூரிய வாள் மற்றும் பாரிய கத்திகளுடன் முகத்தை முற்றாக மறைத்துக் கொண்டு வந்த மூவர் கடை உரிமையாளரின் மனைவி மற்றும் பணியாளர் ஆகியோரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.
அதன் பின்னர் கடை உரிமையாளரின் மனைவியின் கழுத்தில் இருந்த பெறுமதியான தங்க மாலை மற்றும் கடையில் இருந்த பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.
இதன்போது, கடை உரிமையாளரின் மனைவி கைவிரல்களில் கடுமையான வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த பணியாளர் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி., அமெரிக்காவின் Patriot ஏவுகணைகளை தகர்த்தெறியும் ரஷ்யாவின் S-400 News Lankasri
