கொழும்பில் பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடிக்கும் புதுவகை கும்பல்
கொழும்பு - கல்கிசை பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை மயக்கமடைய செய்து பெருந்தொகை பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு திருடப்பட்ட நகைகளில் 4 பவுண் மதிப்புள்ள தங்க நெக்லஸ், 1 பவுண் மதிப்புள்ள தங்க மோதிரம், 10,200 ரூபாய் பணம் ஆகியவை அடங்கும் என்று முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரை கைது செய்ய விசாரணை
கொழும்பில் முச்சக்கர வண்டி சாரதியிடம் பால் பாக்கெட் கொடுத்து, மயக்கமடையச் செய்து பணம் மற்றும் தங்க ஆபரணங்களை கொள்ளையடித்த நபரை கைது செய்ய கல்கிசை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் கொழும்பு ஆர்மர் தெரு பகுதியில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏறி, கொழும்பு கோட்டை பேருந்து நிலையத்திற்கு செல்ல வேண்டுமென கூறியுள்ளார்.
அதன்படி, முச்சக்கர வண்டி சாரதி குறித்த பகுதிக்கு வந்தபோது சந்தேகநபர் அந்த இடத்திலிருந்து இறங்கி பின்னர் தனது மனைவி மற்றும் குழந்தைகள் மோதர பகுதியில் இருப்பதாகவும், அவர்களை அழைத்து வரச் செல்ல வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதன்போது, சந்தேகநபர் சாரதியிடம் உடைத்த பால் பாக்கெட்டைக் கொடுத்ததாகவும்,அதை குடித்த பிறகு, சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடற்கரைக்கு செல்ல விரும்புவதாக கூறியதாகவும் கூறியுள்ளார்.
பொலிஸாரிடம் வாக்குமூலம்
இதன்பின்னர், சந்தேக நபரின் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திரும்பி வரும்போது, உணவு எடுக்க வெள்ளவத்தைக்கு செல்ல வேண்டும் என்று கூறி வெள்ளவத்தை நோக்கி முச்சக்கர வண்டியில் சென்றதாக சாரதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.
கடற்கரைக்கு வந்த சிறிது நேரத்திலேயே, அவர் மயக்கமடைந்ததாகவும், சுயநினைவு திரும்பியபோது, அவர் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் களனி, தியகம சாலை, பட்டியா சந்தியைச் சேர்ந்த 63 வயதுடைய நபர் பாதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் இரண்டு நாட்களுக்கு பிறகு முச்சக்கர வண்டி சாரதி களுபோவில போதனா மருத்துவமனையில் வாக்குமூலம் அளித்ததாக கல்கிசை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri