யாழில் கொள்ளை சம்பவம்: மூவர் கைது
யாழில் இளைஞனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்று அவரிடம் இருந்த பெறுமதிமிக்க பொருட்களை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் யாழ்ப்பாணம் - மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் (23.09.2023) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதன் போது வீதியில் சென்ற இளைஞனை மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் கடத்தி, ஆள்நடமாட்டம் அற்ற பகுதிக்கு கொண்டு சென்று தாக்கி அவரது , கைத்தொலைபேசி மற்றும் மணிக்கூடு என்பவற்றை கொள்ளையடித்து , தப்பி சென்றுள்ளனர்.
இந்நிலையில் அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று இளைஞர்கள் நேற்று(24.09.2023)கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் மூவரை கைது செய்துள்ளதுடன் , அவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
