கொழும்பு நகைக் கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் கொள்ளை
கொழும்பு - ஹோமாகம(Homagama) நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் துப்பாக்கி முனையில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளது.
ஹோமாகம நகரத்தில் உள்ள நகைக் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற நால்வர் அங்கிருந்த பணியாளர்களிடம் துப்பாக்கியைக் காண்பித்து அச்சுறுத்தி 3 இலட்சம் ரூபா பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதன்போது, நகைக் கடையிலிருந்த 36 மோதிரங்களும் 8 பெண்டன்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்நிலையில் சந்தேகநபர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள்களில் போலி இலக்கத்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri