சீரற்ற வானிலை காரணமாக திருகோணமலையில் உடைந்த வீதி
தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக தம்பலகாமம் பிரதேச செயலகத்துக்குட்பட்ட தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதியின் ஒரு பகுதி உடைந்துள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
எனவே இந்த வீதி ஊடாக பயணிப்பதை தவிர்த்து மாற்று வழி ஊடாக பொது மக்களை பயணிக்குமாறு தம்பலகாமம் பிரதேச செயலகம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
கன மழை காரணமாக தம்பலகாமம் பகுதியில் உள்ள பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் மக்களின் இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
பெகோ இயந்திரம்
முள்ளியடி பகுதியில் விவசாய நிலங்கள் உட்பட மக்களின் குடியிருப்பு பகுதிகளிலும் நீர் புகுந்துள்ளதால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
நீரில் மூழ்கியுள்ள பகுதிகளில் மேலதிக நீரை வெளியேற்ற பிரதேச செயலகம் ஊடாக மும்முரமாக பெகோ இயந்திரம் ஊடாக நடை முறைப்படுத்தி வருகின்றனர்.
அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
