கோடி ரூபாய் செலவில் தோப்பூரில் வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பம்!
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் திருகோணமலை, தோப்பூர் -பாலத்தோப்பூர் மையவாடி வீதியை காபட் வீதியாக புனரமைப்பதற்கான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்தலால் ரத்ன சேகர ,பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு நேற்று (16) மாலை இந்த வீதிக்கான வேலைகளை ஆரம்பித்து வைத்தனர்.
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், 750 மீற்றர் நீளமுள்ள இவ் வீதியானது 2 கோடியே 17 இலட்சம் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளது.
வீதி அபிவிருத்தி
இந்நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் அதிகாரிகள், தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நேற்றையதினம் திருகோண மாவட்டத்தில் ஆறு வீதிகளுக்கும் நாடளாவிய ரீதியில் 100 வீதிகளுக்குமான வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








