வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்களுக்கு நேர்ந்த கதி
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்றவர்கள் விபத்துக்குள்ளான நிலையில் படுகாயம் அடைந்துள்ளனர்.
புத்தளம் - சிலாபம் பிரதான வீதியின் முந்தல் மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் இன்று விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்து மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மூவர் காயம்
மதுரங்குளியில் இருந்து விமான நிலையம் நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியொன்று பஸ்ஸின் பின்புறத்தில் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மதுரங்குளி - ஹிதாயத் பகுதியை சேர்ந்தவர்களே விபத்தில் சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
கட்டாரில் வேலைவாய்ப்புக்காக சென்றவரை வழி அனுப்புவதற்காக சென்ற வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த விபத்தின் போது முச்சக்கர வண்டியில் பயணித்த சாரதி உட்பட மூவரும் படுகாயமடைந்து முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் , மேலதிக சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தினால் தனியார் பயணிகள் பஸ்ஸின் பின் பக்கமாக சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன், முச்சக்கர வண்டி பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri
