கிளிநொச்சியில் ஏற்படும் வீதி விபத்துக்கள்.. அரசாங்கதிபர் வெளியிட்டுள்ள தகவல்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்படும் வீதி விபத்தினை தடுத்தல் மற்றும் எதிர்கால சந்ததியினரை நல் வழிப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்கதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கிளிநொச்சி பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர ,கரைச்சி பிரதேச செயலாளர் த.முகுந்தன், வலயக்கல்விப்பணிப்பாளர்கள்,வீதி அபிவிருத்தி அதிகாரசபை மாவட்ட பிரதம மற்றும் நிறைவேற்று பொறியியலாளர்,பாடசாலைகளின் முதல்வர்கள், திணைக்களங்களின் உத்தியோகத்தர்கள் ,பொது அமைப்பு சார்ந்தோர்,தனியார் கல்வி நிலைய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வீதி விபத்துக்களை குறைப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் தங்களுடைய ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்தனர்.
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam