வவுனியா - மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் உயிரிழப்பு (Photos)
வவுனியா - மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தானது வவுனியா - மன்னார் வீதியில் பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் இன்று (10.10.2023) இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
வவுனியா, குருக்கள்புதுக்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிளானது, பம்பைமடு இராணுவ முகாமிற்கு அருகில் வீதியில் நின்ற மாட்டுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் வி.ஜெயந்தினி (வயது 45) என்பவர் பலியாகியுள்ளதுடன், அவரின் மகன் விஜயரட்னம் சிவரோஜன் (வயது 22) காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா, பூவரசங்குளம் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இஸ்ரேல் - ஹமாஸ் கொடூர தாக்குதல் : நிராகரிக்கப்பட்ட உளவுத்துறை எச்சரிக்கைகள்! வெளியான அதிர்ச்சி தகவல் - செய்திகளின் தொகுப்பு (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam