மன்னாரில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: ஒருவர் காயம்
மன்னார் - நாட்டான் பகுதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இளம் தாய் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று புதன்கிழமை (31) நண்பகல் 12 மணியளவில் நாட்டான் பேருந்து நிலையத்தின் முன்பாக உள்ள பிரதான வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குழந்தை காயம் எதுவுமின்றி தப்பியது
அரிப்புத்துறை பகுதியிலிருந்து வங்காலை நோக்கி வந்த மோட்டார் சைக்கிளும் நாட்டான் பேருந்து தரிப்பிடத்தில் இருந்து அரிப்பு துறை நோக்கி குழந்தை ஒன்றுடன் குறித்த இளம் தாய் பயணித்த மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளாகியது.

குறித்த விபத்தில் தாய் காயங்களுக்கு உள்ளாகிய போதும் குழந்தை காயம் எதுவுமின்றி தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த தாய் நானாட்டான் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நல்ல வசூல் வேட்டை செய்யும் விஷ்ணு விஷாலின் ஆர்யன் பட வசூல்... 5 நாளில் செய்துள்ள கலெக்ஷன்... Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri