ஹோட்டல் மற்றும் வாடகை வீடுகளில் இடம்பெற்ற கடத்தல்! இரகசிய தகவலில் சிக்கிய இருவர்
ஹோட்டல் அறைகள் மற்றும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 140 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கையிருப்புடன் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல்
சந்தேக நபர்களிடமிருந்து 01 கிலோ 56 கிராம் கோகைன், 01 கிலோ. 212 கிராம் ஹெராயின் மற்றும் 04 கிலோ 116 கிராம் ஐஸ் போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது

கொழும்பு 6, வெள்ளவத்தை W.A.De சில்வா மாவத்தையில் வாடகைக்கு எடுக்கப்பட்ட சொகுசு வீட்டில் ஒருவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளதாக இரகசிய தகவல் கிடைத்ததாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) தெரிவித்துள்ளது.
இதனையடுத்து குறித்த வீட்டை சோதனை செய்த போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், சோதனையின் போது, அவரிடம் 116 கிராம் ஹெரோயினை கண்டுபிடிக்க முடிந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மண்சரிவு அபாயத்தால் இடம்பெயர்ந்தோர் வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி! எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
சந்தேகநபர் கைது
சந்தேகநபரிடம் நீண்ட நேரம் நடத்திய விசாரணையில், அவரது மூத்த சகோதரர் கடவத்தை, தலுவப்பிட்டி, மிஹிந்து மாவத்தையில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்ததாகவும், அவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த ஹோட்டலை சோதனை செய்து சந்தேகநபரை கைது செய்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவில் நுற்றுக்கணக்கானோர்... கொடுஞ்செயலுக்கு திட்டமிட்ட இருவர்: விரிவான பின்னணி News Lankasri
படப்பிடிப்பு தளத்தில் திடீர் சண்டை போட்டுக்கொண்ட மகாநதி சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam