யாழ்.இளைஞன் மீது பொலிஸாரின் கொடூர தாக்குதல்:விசாரணைகள் ஆரம்பம்
யாழ்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பிரதேசத்தில் நடைபெற்ற திருட்டு சம்பவம் ஒன்றினை அடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
எனினும் அங்கு கொடூரமான முறையில் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் அவசர சிகிச்சைக்காக கடந்த 28ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள்
சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது பொலிஸார் தம்மை கொடூரமாக தாக்கியதாக இளைஞன் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார்.
குறித்த இளைஞனைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொலிஸாரின் தாக்குதலினால் அவரது விலா மற்றும் முதுகெலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam