யாழில் கோர விபத்து: ஒருவர் பலி(Video)
யாழ்.தென்மராட்சி பகுதியில் இன்று (02.05.2023) இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் நோக்கி சென்ற மோட்டார்
சைக்கிளும் கொடிகாமத்திலிருந்து வடமராட்சி நோக்கி சென்ற வான் ஒன்றும் நேருக்கு
நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கிழக்கு அல்வாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இலங்கை போக்குவரத்து சபை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் சாவகச்சேரி பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேவேளை குறித்த விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் கடந்த வாரம் இடம்பெற்ற
விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொரு பொலிஸ்
உத்தியோகத்தர் படுகாயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.