இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பியவர்களுக்கு நேர்ந்த கதி - மூவர் பலி
அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் இருவர் காயம் அடைந்துள்ளனர்.
ரம்பேவ கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இசைநிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த குழுவினர் மீது இன்று அதிகாலை ஜீப் வண்டி ஒன்று மோதி விட்டு சென்றுள்ளது.
மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் வீதியில் நடந்து சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
ஆண்கள் மரணம்
விபத்தினால் காயமடைந்த ஐந்து பேரும் மிஹிந்தலை ரம்பேவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் சிசிச்சை பலனின்றி மூன்று ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்த மற்றைய இரு யுவதிகளும் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த மூவரும் 21, 19 மற்றும் 14 வயதுடையவர்கள். உயிரிழந்தவர்களின் சடலங்கள் ரம்பேவ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தப்பிச் சென்ற சாரதி
அனுராதபுரம் வீதியில் ரம்பேவ நகரத்தில் இருந்து வந்த ஜீப் ஒன்று இந்த குழுவினர் மீது மோதிவிட்டு தப்பி சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam