ரிசானாவும், ஹிசாலினியும் வறுமையின் கொடுமையால் வாழ்விழந்த சகோதரிகள்!
சவுதி அரேபியாவிற்கு வறுமை காரணமாக சென்று மரண தண்டனை விதிக்கப்பட்ட முஸ்லிம் பெண் ரிசானாவும், கொழும்புக்கு வந்த மலையக சிறுமி ஹிஷாலினிக்கும் வறுமையே காரணமென புரிந்துக்கொள்ளப்படாதவரை இந்நாடு உருப்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேஷன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் வேலை செய்து வந்த நிலையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த மலையக சிறுமியின் மரணம் தொடர்பில் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ள பதிவிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்டு அங்கே உயிரிழந்த, கிழக்கிலங்கை மூதூர் கிராமத்தின் ஓர் ஏழை முஸ்லிம் குடும்பத்து சிறுமியான ரிசானா நபிக்கும், 2020ம் ஆண்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டு இங்கே உயிரிழந்த மலையகத்து டயகம கிராமத்தின் ஓர் ஏழை தமிழ் குடும்பத்து சிறுமியான ஹிஷாலினி யூட்குமாரும் வறுமை என்ற கொடுமையால் வாழ்விழந்த சகோதரிகள் என்றும் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா தவாத்மி நகரில் 2005ம் ஆண்டு தாம் பணிப்புரிந்த வீட்டில் 4 மாத குழந்தைக்கு புட்டிப்பால் வழங்குகையில் ஏற்பட்ட மரணத்துக்கு ரிஷானாவே பொறுப்பு என்று கூறப்பட்டு, அவருக்கு டவடாமி மேல் நீதி மன்றத்தினால் மரண தன்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan
