டெல்டா பிளஸ் வைரஸ் தொடர்பில் இலங்கை சுகாதார பிரிவு எச்சரிக்கை
வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் ஊடாக டெல்டா பிளஸ் கொவிட் மாறுபாடு நாட்டில் பரவும் ஆபத்துக்கள் உள்ளதென சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏதாவது ஒரு வகையில் டெல்டா பிளஸ் மாறுபாடு நாட்டினுள் பரவினால் அதன் பரவல் தொடர்பில் மக்களின் சுகாதார செயற்பாட்டிற்கமையவே தீர்மானத்திற்கு வர முடியும் என பிரதி சுகாதார சேவை இயக்குனர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்துள்ளார்.
டெல்டா பிளஸ் தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றது. எனினும் நாட்டில் இன்னமும் இதுவரையில் டெல்டா பிளஸ் தொற்றியவர்கள் இலங்கையில் அடையாளம் காணப்படவில்லை. எனினும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் நாட்டு மக்களின் செயற்பாடுகள் மகிழ்ச்சிகரமாக இல்லை.
இவ்வாறான நிலையில் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
51 ஆண்டுகளுக்கு பின் நிறைவேறிய உலக கோப்பை கால்பந்து கனவு: இருந்தும் ஹைதி ரசிகர்கள் சோகம் News Lankasri
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam