உக்ரேனிய அகதிகள் நாடுகடத்தப்படும் அபாயம் - பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட தகவல்

Boris Johnson Russo-Ukrainian War United Kingdom Ukraine Ukrainian Refugee
By Murali Jun 24, 2022 07:16 PM GMT
Report

உக்ரேனிய அகதிகள் பிரித்தானியாவில் சட்டவிரோதமாக குடியேறினால் ருவாண்டாவிற்கு அனுப்பி வைக்க கட்டாயப்படுத்தப்படலாம் என்று அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கண்மூடித்தனமான தாக்குதலில் இருந்து தப்பியோடிய மக்கள் படகுகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டால் ருவாண்டாவுக்கு விமான பயணம் உறுதி என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில் இருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவில் குடியேற முயன்றவர்களை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தின் முடிவை மனித உரிமைகள் ஆர்வலர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

ஆனால் உக்ரேனிய மக்களுக்கு சிறப்பு விசா அனுமதி வழங்கியுள்ள போரிஸ் ஜோன்சன் நிர்வாகத்தின் இரட்டை நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டினர்.

உக்ரேனிய மக்கள் ஆபத்தான படகு பயணத்திலும், குளிரூட்டப்பட்ட லொறிகளிலும் பிரித்தானியாவுக்குள் நுழையாத வரையில் அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படும் என பிரித்தானியா விளக்கமளித்துள்ளது.

உக்ரேனிய அகதிகள் நாடுகடத்தப்படும் அபாயம் - பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட தகவல் | Risk Of Deportation Of Ukrainian Refugees

உக்ரைனுக்கு உதவ தயாராகும் பிரித்தானியா

இதேவேளை, உக்ரைனின் தெற்கு கடற்கரையில் இருந்து கண்ணிவெடிகளை அகற்றும் பணிகளுக்கு பிரித்தானியா உதவ தயாராக இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உக்ரைனில் தேங்கியுள்ள மில்லியன் தொன் கணக்கான தானியங்களை கொண்டு செல்ல கப்பல்களுக்கு காப்பீடு வழங்குவது குறித்தும் பரிசீலித்து வருவதாக போரிஸ் ஜோன்சன் உறுதி அளித்துள்ளார். பிரித்தானிய பிரதமரின் இந்த அறிவிப்பானது தற்போது இந்த விவகாரத்தில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.

உலகின் முதன்மை தானிய உற்பத்தியாளர்களில் ஒருவரான உக்ரைனில் தற்போது 20 மில்லியன் தொன் தானியங்கள் தேங்கியுள்ளது. இதனால் உணவுப் பொருட்களின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்ததுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் சாப்பிட உணவின்றி சிரமத்திற்கு உள்ளாகினர்.

இந்த நெருக்கடி இரண்டு ஆண்டுகள் வரையில் நீடிக்கும் என்று மேற்கத்திய நிபுணர்கள் தரப்பு கூறி வருகின்றனர். இதனிடையே, இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர துருக்கியும் ஐக்கிய நடுகள் மன்றமும் ஒன்றிணைந்து நான்குவழி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முயற்சி மேற்கொண்டுவருகிறது.

இந்த நிலையில், துருக்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் பேசி வருவதாகவும், தங்களால் என்ன உதவி செய்ய முடியும் என்பதை விவாதித்து வருவதாகவும் பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். 

உக்ரேனிய அகதிகள் நாடுகடத்தப்படும் அபாயம் - பிரித்தானிய பிரதமர் வெளியிட்ட தகவல் | Risk Of Deportation Of Ukrainian Refugees

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US