டெங்கு தொற்று நோயாக உருவாகும் அபாயம்! பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
டெங்கு ஒரு தொற்று நோயாக உருவாகும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக உடலியல் நிபுணர் டாக்டர் ஆனந்த விஜேவிக்ரம எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், கம்பஹா, கொழும்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
2022 மே மாத இறுதியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24,206 ஆக இருந்த நிலையில் இந்தாண்டு இதுவரை 31,098 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதோடு, 6,953 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவதாக அதிக நோயாளிகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர்.

இவ்வருடம் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளதோடு, அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 1,262 ஆகும்.
இதன்படி, டெங்கு நோய் தொற்று நோயாக உருவாகும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 10 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam
சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி : இந்த 3 ராசிகளின் வாழ்க்கையில் அதிர்ஷ்ட கதவு திறந்தாச்சி! Manithan