ரணிலைக் காப்பாற்ற ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர் தொடர்பான பதிவு தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து நேற்றையதினம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக அதிகமான பொதுமக்கள் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ட்ரம்பிடம் கோரிய உதவி
இதன்போது, பல்வேறு வாசகங்கள் கொண்ட பதாதைகளை பொதுமக்கள் ஏந்தியிருந்தனர்.
இவற்றுள், ''TRUMP PLEASE HELP RANIL'' என்ற வாசகத்தைக் கொண்ட பதாதை ஒன்றை போராட்டத்தில் கலந்து கொண்டவர் ஏந்தியிருந்தார்.
இந்த நிலையில், இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Photo curtesy - உரிமையாளருக்கு



