அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Sri Lanka Dengue Prevalence in Sri Lanka
By Jenitha May 06, 2023 12:04 AM GMT
Report

“பாடசாலை மாணவர்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் 24 சதவீதமானோருக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது“ என  என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வுகூட நோய் எதிர்ப்பு மற்றும் ஒவ்வாமை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

கடந்த 6 வருடங்களின் பின்னர் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றமை தொடர்பில் தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பி்ல் மேலும் தெரிவித்ததாவது, 

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Dengue Fever Sri Lanka 2023

தீவிரமடையும் டெங்கு 

“ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக டெங்கு பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய டெங்கு 1, டெங்கு 2, டெங்கு 3 மற்றும் டெங்கு 4 என்ற வைரஸ்களால் டெங்கு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே நபரொருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட சந்தர்ப்பங்களில் டெங்கு நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

இலங்கையில் மே மற்றும்  ஜூலை காலப்பகுதியில் டெங்கு நோய் அதிகளவில் பதிவாகும். 2016ஆம் ஆண்டு டெங்கு 1 வைரஸால் டெங்கு நோய் இனங்காணப்பட்டதன் பின்னர் வழமைக்கு மாறாக அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.

அதன் பின்னர், டெங்கு 2 வைரஸ் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. இதன் காரணமாக 2017இல் வைத்தியசாலை கட்டமைப்புக்கள் நெருக்கடிக்குள்ளாகும் வகையில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து கோவிட் தொற்றின் காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உள்ளிட்டவற்றால் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படும் வீதம் குறைவடைந்தது.

எவ்வாறிருப்பினும், கடந்த ஜனவரி முதல் மீண்டும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து அறிவதற்காக எமது ஆய்வுகூடத்தில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் 2009ஆம் ஆண்டுக்கு பின்னர் டெங்கு 3 வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இனிவரும் காலங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக பாரியளவில் அதிகரிக்கக்கூடும் என்று ஊகிக்கப்படுகிறது.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Dengue Fever Sri Lanka 2023

ஆய்வில் வெளியான தகவல் 

இந்நிலையில், அண்மையில் உலக சுகாதார ஸ்தாபனம், சுகாதார அமைச்சுடன் இணைந்து நாடளாவிய ரீதியில் 9 மாகாணங்களும் உள்ளடங்கும் வகையில் 9 மாவட்டங்களில் உள்ள 145 பாடசாலைகளில் 5208 மாணவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வுக்குட்படுத்தப்பட்டன.

மாணவர்கள் மத்தியில் டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு காணப்படுகிறது என்பதை அறிவதற்காகவே இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில் திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் எதிர்ப்பு சக்தியுடைய மாணவர்கள் 54 சதவீதமானோர் காணப்படுகின்றனர்.

நாடளாவிய ரீதியில் அவதானிக்கும்போது 24.9 சதவீதமான மாணவர்களுக்கு மாத்திரமே டெங்கு நோய் எதிர்ப்பு சக்தி காணப்படுகிறது. டெங்கு நோய்க்கான தடுப்பூசி வழங்கல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆய்வுகளின் நிறைவில் அந்த தரவுகள் முக்கியத்துவம் பெறும்.

டெங்கு 3 வைரஸால் டெங்கு நோய் ஏற்பட்டால் அதிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்வது மிகக் கடினமாகும். எனவே, டெங்கு நுளம்பு பரவாத வகையில் சூழலை தூய்மையாக பேணுவதே அடிப்படை தேவையாகும்“ என்றார்.

மேலும், சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித கினிகே தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அதேநேரம் நாற்பட்ட நோயாளர்கள், வயோதிபர்கள் 48 மணிநேரம் வரை பார்த்துக்கொண்டிருக்காமல் அவர்கள் தங்கள் உடலில் வழமைக்கு மாறான வித்தியாசத்தை உணர்ந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் பாதிப்பை குறைத்துக்கொள்ள முடியும் என்றார்.

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாடுங்கள்! விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு | Dengue Fever Sri Lanka 2023

டெங்கு தொற்றுக்கான அறிகுறிகள் 

அறிகுறிகள் பொதுவாக நுளம்பு கடித்த 4-7 நாட்களுக்குப் பிறகு தோன்றும் மற்றும் 10 நாட்களுக்கு நீடிக்கும். குறிப்பாக லேசான தொற்று ஏற்பட்டால், குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில், எந்தவொரு அறிகுறிகளும் அடையாளங்களும் எப்போதும் காணப்படுவதில்லை.

பொதுவான அறிகுறிகள் மற்றும் அடையாளங்கள் பின்வருமாறு,

  • 104 டிகிரி பாரன்ஹீட் வரை அதிக காய்ச்சல். இது திடீரென்று ஏற்படலாம்
  • கடுமையான தலைவலி
  • குமட்டல் மற்றும் வாந்தி
  • உடலின் பல்வேறு பாகங்களில் தடிப்புகள்
  • சுரப்பிகளில் வீக்கம்
  • உடல் வலி, எலும்பு, மூட்டு வலி
  • மூக்கில் அல்லது ஈறுகளில் இருந்து இரத்தம் வடிதல்
  • தோலில் எளிதில் சிராய்ப்பு
  • சில சமயங்களில், தோலின் கீழ் உள்ள நுண்ணிய துளைகள் சிராய்ப்பு போல் தோன்றும் இது எந்த காயமும் இல்லாமல் ஏற்படலாம்
  • சோர்வு கண் இமைகளுக்குப் பின்னால் வலி

குழந்தைகள் மற்றும் இளையவர்களில், தொற்று பெரும்பாலும் லேசானதாகவே இருக்கும். 

எனவே  கடுமையான டெங்கு காய்ச்சல் உயிருக்கு ஆபத்தானது எனவே காய்ச்சல் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக வைத்தியசாலையினை நாட வேண்டும். 

அத்துடன் எப்போதும் சுற்றுச்சூழலை  டெங்கு பரவாத வகையில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

மரண அறிவித்தல்

வேலணை, திருநெல்வேலி

14 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மானிப்பாய், Dubai, United Arab Emirates, கனடா, Canada

14 Jan, 2021
மரண அறிவித்தல்

சுதுமலை வடக்கு, கந்தர்மடம்

12 Jan, 2025
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Scarborough, Canada, Markham, Canada

09 Jan, 2025
மரண அறிவித்தல்

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, முல்லைத்தீவு, India, பிரான்ஸ், France

14 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வண்ணார்பண்ணை, பொலிகண்டி, London, United Kingdom

13 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கனடா, Canada

14 Jan, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

11 Feb, 2020
மரண அறிவித்தல்

உடுவில், சுவிஸ், Switzerland, London, United Kingdom

11 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுழிபுரம், கொழும்பு, Reutlingen, Germany, Ravensburg, Germany, London, United Kingdom, சென்னை, India

16 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 1ம் வட்டாரம்,, Scarborough, Canada

10 Jan, 2023
மரண அறிவித்தல்

சில்லாலை, வெள்ளவத்தை, London, United Kingdom

02 Jan, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, திருகோணமலை

14 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பரிஸ், France

14 Jan, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில், தமிழ்நாடு, India, பரிஸ், France, Neuss, Germany

06 Jan, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

விடத்தற்பளை, நுணாவில் கிழக்கு, கொழும்பு

13 Jan, 2020
33ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

21 Dec, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பூநகரி, கொழும்புத்துறை, புதுக்குடியிருப்பு

09 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், யாழ்ப்பாணம், கோயிலாக்கண்டி, Sevran, France

06 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US