மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெல்டா வைரஸ் பரவும் அபாயம்!
மட்டக்களப்பு மாவட்டத்திலும் டெல்டா வைரஸ் பரவும் சாத்தியம் இருப்பதாக வைத்தியர் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர் நா. மயூரன் தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மட்டக்களப்பு மக்கள் மிகவும் அவதானத்துடன் சுகாதார நடைமுறைகளை பேணி கொரோனா தொற்றில் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தை பாதுகாக்க உதவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.
நேற்றையமுன் தினம் மட்டக்களப்பு மாமாங்கம் பகுதி 21 நாட்களுக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணித்தியாலத்தில் 44 தொற்றாளர்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
களுதாவளை சிறுவர் இல்லம் ஒன்றில்34 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜன் பரிசோதனையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த இல்லம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.