செயற்கை கோள் ஒன்று இலங்கையில் உடைந்து விழும் அபாயம்
வான் பரப்பில் கட்டுப்பாட்டை இழந்த சீனாவின் செயற்கை கோளின் பாகங்கள் இன்று காலை பூமியில் உடைந்து விழும் என நாசா நிறுவனத்தின் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த பாகங்கள் விழும் உரிய இடம் எது என இதுவரையில் சரியான முறையில் கூற முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த செயற்கை கோள் பயணித்த வீதியில் இடைக்கிடையே இலங்கைக்கு அருகில் காணப்பட்டதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் விண்வெளி அறிவியல் பிரிவின் இயக்குனர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த செயற்கை கோள் உடைந்து கீழே விழும் ஆபத்துக்கள் உள்ளது. இது விழுந்தால் விமானம் ஒன்று கீழே விழுந்தால் ஏற்படும் அளவு சேதம் ஏற்படும்.
பசுபிக் எல்லையில் விழும் ஆபத்துக்களே அதிகமாக உள்ளதென கூறப்பட்டது. எனினும் இலங்கையும் அதன் அபாய எல்லைக்குள் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்தில் எங்கு வேண்டுமென்றாலும் அது விழும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
