நுவரெலியாவில் கோவிட் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம்

Srilanka Covid Nuwaraeliya
By Thirumal May 30, 2021 02:50 PM GMT
Report

கோவிட் - 19 தடுப்பூசி திட்டத்தில் மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அல்லாவிடின் கோவிட் உப கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இருக்கின்றது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதன் பின்னணியில் சீனா இருக்கின்றதா என்ற சந்தேகம் தமக்கு எழுவதாகவும் அவர் கூறினார்.

கோவிட் 19 விவகாரம் மற்றும் இரசாயன உரபயன்பாட்டுக்கான தடை என்பன தொடர்பில் இன்று (30) நுவரெலியாவில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இவை குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு, 

நுவரெலியா மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. தொற்றாளர்களுக்கு சிகிச்சைப்பெறுவதற்கு வைத்தியசாலைகளில் கட்டில்கள் இல்லை.

வெளிமாவட்டங்களுக்கு அவர்களை கொண்டு செல்லும் நிலைமை காணப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் கோவிட் பரவலுக்கு ஆடைத்தொழிற்சாலைகளும் பிரதான காரணமாக அமைகின்றது.

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஆடைத்தொழிற்சாலைகளுக்கு கிராமம் மற்றும் தோட்டப்புறங்களில் இருந்து ஊழியர்கள் வருகின்றனர். அனைவரும் ஒரு இடத்தில் இருந்து வருவதில்லை. வெவ்வேறான பகுதிகளில் இருந்தே வருகின்றனர்.

எனவே, ஒருவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால் அதன்மூலம் பலருக்கு ஏற்படக்கூடிய அபாயமும், உப கொத்தணி உருவாகக்கூடிய சூழ்நிலையும் காணப்படுகின்றது.

எனவே, ஆடைத்தொழிற்சாலைகளை மூடுவதற்கு அல்லது அத்தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பில் மாவட்டத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய அரச இயந்திரம் முழு கவனமும் செலுத்த வேண்டும். அதேபோல பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தமது பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

நெருக்கடியான காலகட்டத்திலும் அவர்கள் உழைக்கின்றனர். நாட்டு பொருளாதாரத்துக்கு பங்களிப்பு வழங்குகின்றனர். எனவே, அவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்படவேண்டும். அதற்காக திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை, நாட்டில் இரசாயன உரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் எதிர்காலத்தில் நன்மை பயக்கக்கூடும். ஆனால் தற்போதைய சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள உரத்தட்டுப்பாட்டால் விவசாயிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இரசாயன உர பயன்பாட்டுக்கு படிமுறை ரீதியாக தடை விதித்திருக்கலாம். அதனைவிடுத்து அவசரமாக எடுக்கப்பட்ட முடிவு தவறானதாகும். இரசாயன உரத்துக்கு மண் பழக்கப்பட்டுவிட்டது. ஹைபிரிட் வதைகள், இரசாயன உரம் இல்லாவிட்டால் சிறந்த விளைச்சலை வழங்காது.

எனவே, அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. சீனா போன்ற நாடுகளில் செயற்கை பயிர்செய்கை இடம்பெறுகின்றது. எனவே, இரசாயன உரத்துக்கான தடையின் பின்னணியில் சீனா இருக்கின்றது என்ற சந்தேகமும் எழுகின்றது என்றார்.

மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், London, United Kingdom

30 Jun, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நல்லூர், Gelsenkirchen, Germany

15 Jun, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கந்தர்மடம், சிட்னி, Australia

14 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, பிரித்தானியா, United Kingdom

13 Jun, 2013
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, புத்தளம், Staten Island, New York, United States

11 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US