தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிகளுக்கு காத்திருக்கும் ஆபத்து
கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிப் பெண்களுக்கு பிறக்கும் குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயம் அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வின்படி, கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மட்டுமல்லாமல், அவர்களுக்கு பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்குள் இறக்கும் அபாயமும் அதிகம் இருப்பதாக தெரியவந்துள்ளது.
அதாவது,ஸ்காட்லாந்தில் முதல் கோவிட் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்ட மார்ச் 2020 முதல் சுமார் 1,44,000 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் தரவுகளை சேகரித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்காட்லாந்தில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு நான்கு வாரங்களுக்குள் குழந்தை பெற்ற பெண்களுக்கு, குழந்தை இறந்து பிறக்கும் ஆபத்து அல்லது குழந்தை பிறந்து ஒரு மாதத்திற்குள் இறப்பது மிக அதிகமான சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒவ்வொரு 1,000 பிறப்புகளுக்கும் 22.6 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதுடன்,இது ஸ்காட்லாந்தின் மொத்த விகிதத்தை விட நான்கு மடங்கு அதிகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட தடுப்பூசி போட்ட பெண்களில் குழந்தை இறப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்று எக்ஸெட்டரில் உள்ள எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் தாய்வழி-கரு மருத்துவ நிபுணரான டாக்டர் சாரா ஜே ஸ்டாக் தெரிவித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் தொற்றுநோய் காலங்களில் கர்ப்பிணிப் பெண்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பதற்கான தடுப்பூசியின் முக்கியத்துவத்தை ஆய்வின் முடிவு வெளிகாட்டுவதாக தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
