பிரான்ஸ் அரசியலில் ஏற்பட்டுள்ள பெரும் குழப்பம் : மேக்ரான் பதவிக்கு ஆபத்து
பிரான்ஸ் ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தல் அறிவித்தார். ஆனால், தேர்தல் முடிந்த பிறகும் புதிய பிரதமரை முடிவு செய்ய அவர் மறுத்துவருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடவடிக்கையை இடதுசாரியினர் தொடங்கியுள்ளனர்.
அதிக வாக்குகள்
ஏனெனில் பிரான்ஸ் தேர்தலில் இடதுசாரிக் கூட்டணி அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சி லூசி காஸ்டெட்ஸ் (Lucie Castets) என்னும் பெண்ணை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியுள்ளது.
ஆனால், அவரை பிரதமராக மேக்ரான் ஏற்க மறுத்து வருவதனாலும், பிரதமர் தேர்வு செய்யப்படாததாலும் பிரான்ஸ் அரசியலில் பெரும் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில், தாங்கள் முனிறுத்திய வேட்பாளரை ஏற்க மறுக்கும் மேக்ரான் அதிகார துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சாட்டும் இடதுசாரியினர், ஜனாதிபதிக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
அதனால், மேக்ரான் பதவிக்கு ஆபத்து ஏற்படுமா என்னும் கேள்வி எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |