ஜனாதிபதி ரணிலுக்கு தொடரும் சோகம் - ஹோட்டலுக்குள் திடீரென புகுந்த அதிகாரிகள்
சுயேச்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து ஹோட்டல் ஒன்றில் நடத்தப்பட்ட மக்கள் கூட்டம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
பன்வில பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இந்த கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களுக்கு மதிய உணவு தயாரிக்கப்பட்டுள்ளதாக கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, கண்டி தேர்தல் செயலக அதிகாரிகள் குழுவொன்று அவ்விடத்திற்கு சென்றுள்ளனர்.
ஹோட்டலுக்குள் ஒன்றுகூடல்
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேலுகுமார் உள்ளிட்டோர் பங்கேற்பதற்கு தயாராகியுள்ளனர்.
அதிகாரிகள் சுற்றிவளைத்த போது ஹோட்டலில் சுமார் 150 பேர் கூடியிருந்தனர். மேலும் தேர்தல் அதிகாரிகளால் அவர்களுக்காக தயாரிக்கப்பட்ட அனைத்து உணவு கைப்பற்றப்பட்டு அவை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் மக்களுக்கு உணவு மற்றும் மதுபானம் வழங்குவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரம்
விதிமுறைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், தேர்தல் அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு கண்டி தேர்தல் அலுவலகம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்வரும் 18ஆம் திகதியுடன் அனைத்து தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளும் நிறைவுக்கு வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் மஹரகம பகுதியில் இளைஞர்கள் மத்தியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போதும் இவ்வாறு அதிகாரிகள் புகுந்த அதனை இடைநிறுத்தியிருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அங்கு பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்று.., ஐஏஎஸ் ஆகாத மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளர் News Lankasri
