அதிகரிக்கும் திருட்டு சம்பவங்கள்: பொலிஸாரின் கோரிக்கை
திருகோணமலையில் திருட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுவருவதாகவும் பொதுமக்கள் அவதானத்துடன் செயல்படுமாறும் பொலிஸார் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
திருகோணமலை மாவட்டத்தில் உப்புவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலேயே அதிக அளவிலான திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
திருட்டு சம்பவங்கள்

குறிப்பாக வாகனங்களின் உதிரி பாகங்களை திருடுதல், வீடுகளில் கொள்ளையடிப்பது மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று தங்க ஆபரணங்கள் திருடுவது போன்ற திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
மேலும் வீடுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களில் இருந்து பெட்ரோல் திருடுகின்றமை போன்ற திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கோரிக்கை

உப்புவெளி பொலிஸ் பிரிவில் நேற்றிரவு (04) மாத்திரம் 13 திருட்டு சம்பவங்களும், மொரவெவ பிரதேசத்தில் ஆறு முறைப்பாடுகளும் உள்ளடங்களாக மாவட்டத்தில் மொத்தமாக 50க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களது பிரதேசத்தில் எவராவது தேவையற்ற விதத்தில் நடமாடினால் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தனது திருமண புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்ட பிக்பாஸ் புகழ் ஜுலி... புகைப்படங்கள் இதோ Cineulagam
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri