பிரித்தானியாவில் மருத்துவர் ஒருவரின் மோசமான செயல்
பிரித்தானியாவின் ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் மற்றும் டட்லி ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்கள் உட்பட 38 நோயாளிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக மருத்துவர் ஒருவர் மீது 40க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பர்மிங்காம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான நாதனியல் ஸ்பென்சர் (Nathaniel Spencer) என்ற அந்த மருத்துவர், செவ்வாய்க்கிழமை அன்று வடக்கு ஸ்டாஃபோர்ட்ஷயர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற விசாரணையின் போது
2017 மற்றும் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், 'ரொயல் ஸ்டோக் பல்கலைக்கழகம் மற்றும் டட்லியில் உள்ள 'ரசல்ஸ் ஹால்' ஆகிய மருத்துவமனைகளில் பணியாற்றிய போது அவர் இந்தக் குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களும் அடங்குவர் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற விசாரணையின் போது தனது முகவரி மற்றும் பிறந்த திகதியை மட்டும் உறுதிப்படுத்திய ஸ்பென்சருக்கு, சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் பெப்ரவரி 20ஆம் திகதி ஸ்டோக்-ஆன்-ட்ரெண்ட் கிரவுன் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
அதுவரை அவர் மருத்துவராகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், மருத்துவப் பதிவேட்டிலிருந்தும் இடைக்காலமாக நீக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri