வெளிநாட்டில் தலைமறைவான பாதாள உலக கும்பல் தலைவரின் சகா கைது
வெளிநாட்டில் உள்ள பாதாள உலக கும்பல் தலைவரின் சகா ஒருவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபர் அநுராதபுரம், மீகலேவ - சியம்பலன்கமுவ பிரதேசத்தில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
துப்பாக்கி மற்றும் கைக்குண்டுகள் மீட்பு
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் கல்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடையவர் ஆவார்.

சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் விசாரணை பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.