அரச புலனாய்வு பிரிவின் பலருக்கு இடமாற்றம் : எதிர்க்கட்சி குற்றச்சாட்டு
அரச புலனாய்வு பிரிவின் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றதன் பின்னர் சுமார் 40 அரச புலனாய்வு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரம்
உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றபோது புலனாய்வு பிரிவினரை பாதுகாக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தி வலியுறுத்தி வந்ததாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

கடந்த காலங்களில் புலனாய்வு பிரிவினரை பாதுகாக்க வேண்டும் என கோஷம் எழுப்பிய தற்போதைய ஆளும் தரப்பு புலனாய்வு பிரிவை சேர்ந்த பலரை இடமாற்றம் செய்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரச புலனாய்வு பிரிவை சேர்ந்த அதிகாரிகளை இடம் மாற்றுவதன் மூலம் அரச புலனாய்வு கட்டமைப்பை சீர்குலைக்க முயற்சிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை தாம் நாடாளுமன்றில் ஆவணப்படுத்துவதாக சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாக போகும் கில்லாடி ஜோடிஸ் நடன நிகழ்ச்சி... யார் யார் போட்டியாளர்கள், வீடியோ இதோ Cineulagam