உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள ட்ரம்பின் அறிவிப்பு
கிரீன்லாந்து தீவை (Greenland) வாங்கும் தனது திட்டத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இது உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிரீன்லாந்து திட்டம்
வெள்ளை மாளிகையில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், கிரீன்லாந்து தீவை அமெரிக்கா வசப்படுத்துவது "தேசிய மற்றும் உலகப் பாதுகாப்பிற்கு மிக அவசியம்" என்று கூறியுள்ளார்.

இத்திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் நாடுகள் மீது புதிய வர்த்தக வரிகளை (Tariffs)விதிக்கப்போவதாக அவர் எச்சரித்துள்ளார். "இதிலிருந்து பின்வாங்கும் பேச்சுக்கே இடமில்லை" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன், அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை வன்மையாகக் கண்டித்துள்ளார்.
அமெரிக்காவின் வர்த்தக வரி
"விதிமுறைகள் அற்ற உலகை நோக்கி நாம் நகர்கிறோம்" என்று எச்சரித்த அவர், அமெரிக்காவின் வர்த்தக வரி விதிப்புகள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான மோதல் முற்றியுள்ள நிலையில், அமெரிக்காவுடன் மேற்கொள்ளப்படவிருந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கான அனுமதியை நிறுத்திவைக்க ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் மிரட்டலுக்குப் பணியப் போவதில்லை என ஐரோப்பியத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri
குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri
பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா 6 வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தார்? வைரலாகும் புகைப்படம் Manithan