அதிகரித்து வரும் கோவிட் தொற்றாளர்கள் - மருத்துவர் அன்வர் ஹம்தானி எச்சரிக்கை
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 15 வீதம் முதல் 20 வீதத்திற்கு இடையிலான எண்ணிக்கையில் அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் தொழிற்நுட்ப சேவைகள் பணிப்பாளரும் கோவிட -19 ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் அன்வர் ஹம்தானி (Dr.Anwar hamdani) தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமை காரணமாக மக்கள் தற்போதைய சந்தர்ப்ப்தில் ஒன்றுக்கூடுவதை தவிர்த்து புத்திசாலித்தனமாக நடந்துக்கொள்வது முக்கியமானது. கோவிட் காரணமாக இதுவரை வைத்தியசாலைகளில் 7 ஆயிரத்து 10 நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலைகளில் ஒக்சிஜனை நம்பி வாழும் 105 நோயாளர்கள் இருப்பதுடன் 55 நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மூன்றாவது அலையின் போது ஒக்சிஜனை நம்பி வாழும் நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 38 வரை அதிகரித்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 201 ஆக அதிகரித்தது.
எனினும் ஒக்சிஜன் நம்பியுள்ள மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு மட்டத்திற்கு குறைந்துள்ளது.
கொரோான தடுப்பூசிகள் வழங்கப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் இதனால், தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவர் ஹம்தானி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
