மக்கள் நலன் சார்ந்த கட்சியிலேயே பயணிப்பேன்: முன்னாள் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் கருத்து
எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்த கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளதாக சமூக சேவகரும் முன்னாள் மொட்டுக் கட்சி (SLPP) முக்கியஸ்தருமான றிஸ்லி முஸ்தபா (Rizli Mustafa) தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் களம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து வெளியிடும்போது,
“மொட்டு கட்சியிலிருந்து கடந்த நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளராக போட்டியிட்ட நான் கணிசமான அளவு வாக்குகளை பெற்றேன்.
மக்களின் தேவைகள்
ஆனால் தற்பொழுது நடுநிலையாகவே பயணித்து வருகிறேன். ஏனென்றால் எமது மக்களின் அவா நிறைவேற்றப்பட வேண்டும்.

மக்களின் தேவைகள் பிரதேச அபிவிருத்தி, மக்களின் ஒற்றுமை போன்ற விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
அதற்கு ஏற்றாற்போல் எந்தக் கட்சி மக்கள் நலன் சார்ந்து செயற்படுகிறதோ அந்த கட்சியில் இணைந்து பயணிக்க தயாராக உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விந்தணுக்கள் மூலம் Super Race மனித இனத்தை உருவாக்க திட்டமிட்ட எப்ஸ்டீன்: வெடித்துள்ள புதிய சர்ச்சை News Lankasri
ரஜினியுடன் இரவு நேரத்தில் பைக்கில் சென்னையை சுற்றிய நடிகை.. நேரில் பார்த்த அனிருத்தின் தந்தை Cineulagam
மூத்த இராணுவ உளவுத்துறை அதிகாரியை சுட்டவர்..அமீரகத்திற்கு தப்பிச்சென்ற நிலையில் துபாயில் கைது News Lankasri