பிரித்தானிய பொதுத் தேர்தலில் தோல்வியை சந்திக்கவுள்ள ரிஷி சுனக் : வெளியான கருத்துக்கணிப்புகள்
பிரித்தானியாவின் முதல் இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷி சுனக் (Rishi Sunak) அடுத்த தேர்தலில் தோல்வியடைவார் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி இம்முறை படுதோல்வியடையும் என்று இதுவரை மூன்று கணக்கெடுப்புகளில் தெரியவந்துள்ளது.
கணக்கெடுப்பு முடிவுகள்
மேலும் வெளியான மற்றொரு சமீபத்திய கணக்கெடுப்பு ஜூலை 4ஆம் திகதி நடைபெறும் தேர்தலில் சுனக் மோசமாக தோல்வியடைவார் என்று கணித்துள்ளது.
இதன்படி கணக்கெடுப்பில், தொழிலாளர் கட்சிக்கு ஆதரவு 46 சதவீதமாக இருந்தது, அதே நேரத்தில் கன்சர்வேடிவ் கட்சியின் ஆதரவு நான்கு புள்ளிகள் குறைந்து 21 சதவீதமாக உள்ளது.

சண்டே டெலிகிராப் இதழுக்காக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Savanta ஜூன் 12 முதல் ஜூன் 14 வரை இந்த ஆய்வை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்கள் தபால் வாக்குகளைப் பெறுவதற்கு சில தினங்களுக்கு முன்புதான் கணக்கெடுப்பு முடிவுகள் வெளியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.
650 உறுப்பினர்கள்
வரும் பிரித்தானிய பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி பெறுவது வெகு தொலைவில் இருக்கும் என்பதை தாங்கள் நடத்திய கருத்துக்கணிப்புகள் காட்டுவதாக Savanta Political Research இன் இயக்குனர் கிறிஸ் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

650 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் கன்சர்வேடிவ் கட்சி வெறும் 72 இடங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று சர்வே கணித்துள்ளது.
மேலும், 200 ஆண்டு கால பிரித்தானிய தேர்தல் வரலாற்றில் இது மிகக் குறுகியதாகும். கணக்கெடுப்பின்படி, தொழிலாளர் கட்சி 456 இடங்களைப் பெறும் என குறிப்பிடப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 14 மணி நேரம் முன்
விஜய் டிவியில் புதிதாக வரும் 'தாய் மாமன்' சீரியல்.. ஒளிபரப்பாகும் நேரம், நாள் தெரியுமா.. இதோ வீடியோ Cineulagam
கனடாவில் இலங்கைத் தமிழர்கள் மூவர் விபத்தில் கொல்லப்பட்ட வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தீர்ப்பு News Lankasri