இந்தியாவில் 2 வயது குழந்தைக்கு தந்தை வழங்கிய அதிர்ச்சியான தண்டனை
இந்தியாவில்(India) உத்தர பிரதேச மாநில மீரட் மாவட்டத்தில் தந்தை ஒருவர் தமது இரண்டு வயது குழந்தையை ஆற்றில் வீசிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அத்துடன், அதற்காக அவர் கூறிய காரணமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக குறித்த குழந்தை காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசாரணை
இதனையடுத்து, தந்தையின் மீது சந்தேகப்பட்ட பொலிஸார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது தாம் 2 வயது குழந்தையை ஆற்றில் வீசியதாக அவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
மேலும், குறித்த 2 வயது குழந்தையும் அந்த குழந்தையின் சகோதரனும் சண்டையிட்டதால், ஆத்திரமடைந்து 2 வயது குழந்தையை ஆற்றில் வீசியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அவருடைய இன்னும் இரண்டு குழந்தைகளும் சில காலங்களுக்கு முன்னர் காணாமல் போனதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

ட்ரம்புக்கு பதிலடி... 8,000 அமெரிக்க தயாரிப்புகள் மீது வரி விதிக்க பிரித்தானியா முடிவு News Lankasri
