பிரித்தானியாவில் சுனக் தரப்புக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
பிரித்தானியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சி நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்திக்கும் என கூறப்படுகின்றது.
பிரித்தானிய தேர்தல் தொடர்பில், சிவில் சமூக பிரச்சார அமைப்பான ‘பெஸ்ட் ஃபார் பிரிட்டன்’ (Best for Britain) நடத்திய மெகா கருத்துக் கணிப்பிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.
பிரித்தானியாவில் இவ்வாண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு
இந்த தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு? என்பது குறித்து ‘பெஸ்ட் (Best for Britain) நடத்திய மெகா கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், ஆளும் கன்சர்வேடிவ் கட்சியைவிட, 19 புள்ளிகள் முன்னிலையுடன் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 45 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.
அதன்படி, தற்போது தேர்தல் நடத்தப்பட்டால், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி நாடு முழுவதும் 250 எம்.பி.க்களை இழக்க நேரிடும் என கூறப்படுகின்றது.
தொழிலாளர் கட்சியான எதிர்கட்சி 468 இடங்களை பெற்று வெற்றி பெறும் என்றும் அந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகிறது.
கடுமையான பின்னடைவு
மேலும், பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு கடுமையான பின்னடைவு ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
மேலும் அமைச்சரவையில் உள்ள 28 பேர் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு போட்டியிடுவார்களாயின், அவர்களில் 13 பேர் மட்டுமே மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என Best for Britain கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
