ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த சிறுமி உயிரிழப்பு! அமைச்சர் சரத் வீரசேகரவின் நடவடிக்கை
ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிப்புரிந்து வந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த சிறுமியின் வீட்டிற்கும் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் வைத்து இன்றைய தினம் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இதன்போது நாடாளுன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க கருத்துரைக்கையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இங்கு இருப்பதால் நான் கேட்க விரும்புகின்றேன்.
ரிஷாத் பதியுதீன் வீட்டில் தீக்காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்த சிறுமி பாலியல் துன்புறுத்தல்களுக்கும் உள்ளாகியுள்ளதாக செய்திகளின் மூலமாக தெரிந்து கொண்டேன்.
அந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சில நாட்களுக்கு பின்னரே உயிரிழந்துள்ளார்.
ஆகவே அமைச்சர் சரத் வீரசேகர அவர்களே இது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது எந்த நிலையில் உள்ளது? என்ன நடக்கின்றது? என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகின்றேன் என வினவியுள்ளார்.
இதற்கு அமைச்சர் சரத் வீரசேகர பதிலளிக்கையில், 16 வயதான அந்த சிறுமி உங்கள் கூட்டணியில் ஒருவரான ரிஷாத் பதியுதீன் உடைய வீட்டில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த நிலையிலேயே அவர் எரிகாயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். வைத்திய அறிக்கையின் படி அவர் தொடர்ந்தும் பல முறை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகவே பொலிஸார் அது தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பாக சிறுமியின் வீட்டிற்கும் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கூடிய விரைவில் இது தொடர்பாக தீர்மானங்கள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது சிறுமி தொடர்பான விவகாரம் என்பதால் இந்த விடயத்திற்கு அளவுக்கதிகமான முக்கியத்துவத்தை வழங்க வேண்டாம், அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் குறித்த குடும்பம் பெரும் துன்பத்தையும், சமூக களங்கத்தையும் எதிர்கொண்டுள்ளது. பொலிஸார் இந்த விவகாரத்தை உரியமுறையில் விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமியை வேலைக்கு அமர்த்தியவர்களின் தொலைபேசி உரையாடல்கள் குறித்த விபரங்களை நீதிமன்றம் கோரியுள்ளது. விசாரணைகள் இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
