ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய அரசியல் போக்கு குறித்து ரிசாத் பதியுதீன் கவலை
ஐக்கிய மக்கள் சக்தியின் தற்போதைய அரசியல் போக்கு குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரிசாத் பதியுதீன் தனது ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளார்.
கூட்டணியின் அடிப்படைக் கொள்கைகளை கைவிட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமைகள் அல்ல, ஐக்கிய மக்கள் சக்தி ஒரு அரசியல் கட்சி, நாங்கள் அந்த கூட்டணியின் பங்காளிகள்” என்று ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மில்லியன் கணக்கான ரூபாய்கள் செலவு
இரண்டு ஜனாதிபதி தேர்தல்களின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்காக தங்களது ஆதரவாளர்கள் மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டு, இரவும் பகலும் உழைத்ததாகக் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் வாக்குகளைத் திரட்டி கூட்டணிக்கு வழங்கியதாகவும், கட்சிகளுக்கிடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தேசியப் பட்டியல் நியமனங்கள், நாடாளுமன்றப் பதவிகள் மற்றும் அமைச்சுப் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனினும், ஜனாதிபதி தேர்தலின் போது கொண்டிருந்த அரசியல் நிலைப்பாட்டிலிருந்து ஐக்கிய மக்கள் சக்தி விலகிச் செல்வது போல் தோன்றுவது தனக்கு கவலையளிப்பதாகத் தெரிவித்த அவர், இது குறித்து சஜித் பிரேமதாசவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது கவலையை நேரடியாகத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.
நம்பிக்கையின் முக்கியத்துவம்
அரசியல் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் சஜித் பிரேமதாச தனது கொள்கைகளில் சமரசம் செய்யக்கூடாது என வலியுறுத்திய பதியுதீன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வெற்றி, அரசியல் கொள்கைகள் மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் முக்கியத்துவத்தையே காட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இனவாதம் மற்றும் மத தீவிரவாதம் நாட்டிற்கும் எதிர்கால தலைமுறைக்கும் நல்லதல்ல என்பதை இலங்கையின் வரலாறு கற்பித்துள்ளதாக எச்சரித்த ரிசாத் பதியுதீன், ஐக்கிய மக்கள் சக்தியின் சமீபத்திய நடத்தைகள் தனக்கு திருப்தியளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
குற்றங்கள் நிரூபணமானால்... தாமஸ் மெர்க்கலுக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனைக்கு வாய்ப்பு News Lankasri
இதெல்லாம் நிக்காது, எல்லாரும் எம்ஜிஆர், ஜோசப் விஜய் ஆகிட முடியாது! தனுஷ் பற்றி துரைமுருகன் Cineulagam