சட்டங்களை மீறும் இந்திய கடற்றொழிலாளர்கள்: சபையில் ரிஷாட் முன்வைத்த கோரிக்கை
இன்யைதினம் நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றிய மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியூதின் இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் உரையாற்றுகையில், "ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் அம்பாறை மாவட்ட கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.
ஒலுவில் துறைமுகம் புனரமைக்கப்பட்டால் IMUL கடற்றொழில் படகுகளை செலுத்துகின்றவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
கல்முனை, சாய்ந்தமருது, காத்தான்குடி, வாழைச்சேனை, கோறளைப்பற்று போன்ற பகுதிகளில் IMUL கடற்றொழில் படகுகளை செலுத்துகின்றவர்கள், தற்பொழுது வாழைச்சேனையில் தான் தங்களுடைய படகுகளை கட்ட வேண்டிய நிலை, மீன்களை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |