முல்லைத்தீவு பாடசாலை ஆசிரியரும் - மாணவியும் வைத்தியசாலையில் அனுமதி
முல்லைத்தீவிலுள்ள பாடசாலையொன்றின் மாணவி ஒருவரும், ஆசிரியரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஒன்று நேற்றையதினம் (04.03.2025) இடம்பெற்றுள்ளது.
நீரை அருந்திய மாணவி
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலைக்கு நேற்றையதினம் அதே பகுதியில் வசிக்கும் மாணவி ஒருவர் வீட்டில் இருந்து தண்ணீர் கொண்டு சென்றுள்ளார்.

அதனை சக மூன்று மாணவிகள் அந்த நீரை அருந்தியுள்ளதுடன் தண்ணீரை குடித்த மாணவிகள் வாந்தி எடுத்துள்ளனர்.
அதனையடுத்து குறித்த விடயம் ஆசிரியர் ஒருவருக்கு தெரியப்படுத்தபட்டதனையடுத்து குறித்த மாணவி தண்ணீர் போத்தலை சோதனை செய்து பார்த்தபோது போதைபொருள் வாசனை வீசியுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
அதனையடுத்து குறித்த மாணவியை ஆசிரியர் தாக்கியுள்ளார். இதனால் குறித்த மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவி வீட்டுக்கு சென்று தந்தையிடம் முறையிட்டதனை தொடர்ந்து பாடசாலைக்கு விரைந்த தந்தை குறித்த ஆசிரியரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்குள்ளான ஆசிரியரும் நேற்றையதினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri