மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்திய ரிஷாட் பதியுதீன் எம்.பி
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு, தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், இன்று (13) கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
அதனைத்தொடர்ந்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹூல்டன் உடன் கலந்துரையாடலை மேற்கொண்டு தனது அனுதாபத்தையும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





