காலிமுகத்திடல் போராட்டக்கள குழுவினருடன் ரிஷாத் பதியுதீன் சந்திப்பு
காலி முகத்திடல் போராட்டக்கள குழுவினரின் பிரதிநிதிகள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அவரது கட்சி அலுவலகத்தில் இன்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, எதிர்வரும் புதன்கிழமை (20) புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் தொடர்பில், போராட்டக்கள பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.

போராட்டக்கள பிரதிநிதிகள் அரசியல், சமூக, பொருளாதார விடயங்கள் தொடர்பாக தமது கருத்துக்களையும், தாம் கொண்டிருக்கும் திட்டங்களையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆவணம் கையளிப்பு
அத்துடன் இது தொடர்பான ஆவணமொன்றையும் கையளித்துள்ளனர்.

தொடர்ச்சியாக அரசியல் கட்சிகளுடன் போராட்டக்கள குழுவினர் நடாத்தி வரும் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாகவே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri