ஜேர்மனியில் கோவிட் தொற்றின் வேகம் அதிகரிக்கும் - சுகாதார நிறுவனம் தெரிவிப்பு
ஜேர்மனியில் கோவிட் வைர்ஸின் மற்றொரு பெரிய அலை துவங்குவதால், ஏப்ரல் மாத நடுப்பகுதி வாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு தொற்று அதிகரிக்கும் என ஜேர்மனியின் சுகாதார நிறுவனமான Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 23 நிலவரப்படி, ஒரு வாரத்துக்கு 100,000 பேருக்கு 214 பேருக்கு கோவிட் தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 12ம் திகதி அளவில் அந்த எண்ணிக்கை 100,000 பேருக்கு 350 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போதைய தொற்று பரவல் அதிகரிப்புக்கு பிரித்தானிய வகை கோவிட் வைரஸ்தான் காரணமாக இருக்கும் நிலையில், ஜேர்மனியிலுள்ள 50 சதவிகிதம் கோவிட் வைரஸும் பிரித்தானிய வகை கோவிட் வைரஸ்தான் என தெரியவந்துள்ளது.
அவ்வகை வைரஸ் அதிக அளவில் பரவக்கூடியதும், முந்தைய வைரஸைவிட பயங்கரமானதும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பிரித்தானிய வகை கோவிட் வைரஸ் சரியாக 12 நாட்களுக்கு ஒரு முறை இரட்டிப்பாவது தெரியவந்துள்ளதாகவும் Robert Koch நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதை வைத்து பார்க்கும்போது, ஏப்ரல் நடுப்பகுதி வாக்கில், ஒரு வாரத்துக்கு 100,000 பேருக்கு 500 பேருக்கு புதிதாக பரவியிருக்க வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியில் இன்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், 6,604 பேருக்கு புதிதாக பரவியுள்ளதோடு 47 பேர் பலியாகியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
