அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும்! ரிஷாட் பதியுதீன்
அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, புத்தளத்தில் நேற்று (17.09.2024) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மக்களின் வாக்குகள்
அவர் மேலும் கூறியதாவது,
"முஸ்லிம் தாய்மார்களின் கருவறைகளில் பயங்கரவாதம் உயிர்ப்படைவதாக நாடாளுமன்றத்தில் கூறியவர்தான் அநுரகுமார திசாநாயக்க.
ஈஸ்டர் தாக்குதல் காலங்களிலும், கோவிட் தொற்று நேரங்களிலும் அநுரவின் சுயரூபத்தைக் காணமுடிந்தது.
முஸ்லிம்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தி எடுத்த நிலைப்பாட்டை நாம் மறக்க முடியாது.
ஜனாஸாக்களை எரிப்பதற்கு எண்ணெய் ஊற்றுவதுபோல உதவியவர்கள் இவர்கள். பயங்கரவாதத்துடன் எமது இஸ்லாத்தை இணைத்துப் பேசியவர்களும் இவர்கள் தான்.
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் எம்.பிக்கள் நாற்பது பேர், இன்றும் ஓய்வூதியம் பெறுகின்றனர்.
வருடக்கணக்காக குற்ற ஆதாரங்களை வைத்துக்கொண்டு அலையும் இவர்களால், ஒரு கள்வனைகூட பிடிக்க முடியவில்லை.
இவர்களால் வீசா மோசடியைத் தடுக்க முடியவில்லை.
கெஹெலியவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் தேசிய மக்கள் சக்தி பேசவே இல்லை. இந்த நிலையில் தான் மாற்றம் வேண்டும் எனப் பிரசாரம் செய்கின்றனர்.
அனுபவமே இல்லாத கோட்டாபய ராஜபக்ச இரண்டு வருடங்களில் ஓடினார். அந்தக் காய்ச்சல் நீங்குவதற்குள் அநுரவின் காய்ச்சல் சிலரைப் பீடித்துள்ளது.
அநுர ஆட்சிக்கு வந்தால் ஆறு மாதங்களில் ஓட நேரிடும். சொந்தங்களை, உறவுகளைக்கூடக் கவனிக்காத, தொப்பி அணிந்த சிலரே, அநுரவுக்குப் பின்னால் வீர வசனம் பேசுகின்றனர்.
ரணிலுக்கு அளிக்கும் வாக்குகளை கடலில் கொட்டிவிடலாம். களப்போட்டியில் ரணில் விக்ரமசிங்க மூன்றாவது இடத்திலேயே உள்ளார்.” என அவர் தெரிவித்துள்ளார்.

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

தமிழ்நாட்டில் வசூல் வேட்டையாடி வரும் குட் பேட் அக்லி.. 7 நாட்களில் எவ்வளவு வசூல் தெரியுமா Cineulagam

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
