இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம்! எங்கு காணலாம்...
இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று(17) நிகழ உள்ளது.
இது சாதாரண சூரிய கிரகணம் அல்ல. இது வளைய (Annular) சூரிய கிரகணம், அதாவது “Ring of Fire” (தீ வளையம்) என்று அழைக்கப்படும் ஒரு விசேஷ கிரகணமாகும்.
சூரிய கிரகணம்
இந்த கிரகணத்தின் போது, சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே செல்கிறது. ஆனால், அது சூரியனை முழுமையாக மறைக்காது. அதன் காரணமாக, சூரியனின் வெளிப்புற விளிம்புகள் பிரகாசமான வளையமாகத் தெரியும்.

இதனால் தான் இதற்கு “Ring of Fire” என்று பெயர் என்று அழைக்கப்படுகின்றது.
இந்த கிரகணத்தில், சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நகரும். சூரியன் முழுமையாக மறைக்கப்படாது. அதன் வெளிப்புற விளிம்புகள் தென்பட்டு பிரகாசமான வளையம் உருவாகும்.
நாசா தகவல்
மேலும், இந்த வளைய சூரிய கிரகணத்தை அண்டார்டிகாவில் முழுமையாகக் பார்க்கலாம் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
ஆபிரிக்கா, தென் அமெரிக்கா பகுதிகள் மற்றும் பசிபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் பகுதி கிரகணமாகத் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வேறுநாடுகளில் உள்ளவர்கள் விண்வெளி ஆய்வு நிறுவனங்களின் நேரலை ஒளிபரப்புகள் மூலம் பார்க்க முடியும்.
சூரியனை நேரடியாக பார்ப்பது ஆபத்தானது. எப்போதும் சிறப்பு கிரகணக் கண்ணாடிகள் (eclipse glasses) பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri