நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்! கைதுகள் பழிவாங்கல்கள் அல்ல என்றும் ரில்வின் சில்வா விளக்கம்

Kalutara National People's Power - NPP Tilvin silva
By Rakesh Sep 07, 2026 05:03 AM GMT
Report

நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தி, பொதுமக்கள் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்குகளின் காலதாமதம் மற்றும் செலவினங்களைக் குறைத்து விரைவான நீதியை வழங்குவதற்காகவே அரசமைப்புத் திருத்தங்களை முன்னெடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசு ஆட்சியைப் பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் பூர்த்தியாகும் நிலையில், 'நமது அரசு: ஈராண்டு ஆட்சி - நாட்டுக்கு மாட்சி' எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதியின் மக்கள் சந்திப்பின் இரண்டாவது கூட்டம் நேற்று (06.09.2026) களுத்துறை - பேருவளைப் பிரதேசத்தில் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அரசமைப்புத் திருத்தங்கள்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நாட்டின் நீதித்துறையை வலுப்படுத்தவும், பொதுமக்கள் எதிர்நோக்கும் காலதாமதங்களையும் செலவினங்களையும் தவிர்த்து மிக விரைவாக நீதி வழங்கவுமே தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தங்களைக் கொண்டுவர முயற்சிக்கின்றது. மாறாக, கடந்த காலத்தில் தங்களது அதிகாரத்தை நீடித்துக்கொள்ளவும், ஜனாதிபதியின் பதவிக்காலத்தை வரம்பின்றி நீடிக்கவும் 18ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்தவர்களும், 20ஆவது திருத்தத்தின் மூலம் அதிகாரங்களை மேலும் அதிகரித்துக்கொண்டவர்களும்தான் இன்று அரசின் மீது சர்வாதிகார முத்திரை குத்த முற்படுகின்றனர்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து அவரைப் பதவியிலிருந்து அநியாயமாக வெளியேற்றியவர்கள் அன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பேசவில்லை. ஜனநாயகத்தை மீறி நீதிபதிகளின் வீடுகளுக்கு முன்னால் சென்று கல்லெறிந்து கூச்சலிட்ட வரலாற்றைக் கொண்டவர்கள்தான் இன்று ஜனநாயகத்தைப் பற்றிப் பாடம் எடுக்கின்றார்கள்.

தேசிய மக்கள் சக்தியே உரிமைகளையும் ஜனநாயகத்தையும் துயரங்கள் ஊடாகப் புரிந்துகொண்ட ஓர் இயக்கம் என்பதால், ஆட்சியாளர்களின் விருப்பமல்லாது பொதுமக்களின் தேவைகளையும் நிவாரணங்களையுமே ஜனநாயகம் என்று கருதுகின்றோம். தற்போது மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற வழக்குகள் யாவும் அரசியல் பழிவாங்கல்கள் அல்ல.

நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்! கைதுகள் பழிவாங்கல்கள் அல்ல என்றும் ரில்வின் சில்வா விளக்கம் | Rilwin Silva Explains That Arrests Not Retaliation

தீர்மானம் நீதிமன்றத்திடமே உள்ளது

மாறாக, குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு போன்ற சுயாதீன நிறுவனங்கள் முறையான விசாரணைகளை நடத்தி, சாட்சியங்களைச் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றனவே தவிர, அரசு இதில் எங்குமே தலையிடுவதில்லை. நீதிமன்றமே சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைப்பதையா அல்லது பிணையில் விடுவிப்பதையா என்பதைத் தீர்மானிக்கின்றது.

மாறாக, கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் தங்களது அரசியல் எதிரிகளைச் சட்டரீதியாகக் கையாள்வதைவிட்டுவிட்டு, லசந்த விக்கிரமதுங்க, பிரகீத் எக்னெலிகொட போன்ற ஊடகவியலாளர்களைப் படுகொலை செய்தும், கடத்தியும், ஊடக நிறுவனங்களுக்குத் தீ வைத்ததுமே அவர்களது ஜனநாயகமாகக் இருந்தது. அவ்வாறான வரலாற்றைக் கொண்டவர்கள் யார் என்பது முழு நாட்டுக்கும் தெரியும்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஒரு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் முடிந்த பின்னரும் எந்தவொரு வன்முறைச் சம்பவமும் மனிதப் படுகொலைகளும் இன்றி அமைதியான முறையில் தேர்தல் வெற்றிகள் கொண்டாடப்பட்ட பெருமை தேசிய மக்கள் சக்தியையே சாரும். தேர்தல் வெற்றிகளின் போது எவரும் பட்டாசுகளைக் கொளுத்தியோ, வன்முறைகளில் ஈடுப்பட்டோ எவருக்கும் துன்புறுத்துகளை வழங்கவில்லை.

சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பு

மாறாக, எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியான ஜனநாயக அரசியல் கலாசாரத்தை இந்த அரசு நாட்டுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது ஒரு கட்சியின் வெற்றிக்காக மட்டுமல்ல, பல தசாப்தங்களாகத் தாழ்த்தப்பட்டு, மாற்றத்தை எதிர்நோக்கியிருந்த சாதாரண மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இது.

நீதியை விரைந்து வழங்கவே அரசமைப்புத் திருத்தங்கள்! கைதுகள் பழிவாங்கல்கள் அல்ல என்றும் ரில்வின் சில்வா விளக்கம் | Rilwin Silva Explains That Arrests Not Retaliation

எனவே, இந்த அரசு குறிப்பிட்ட ஓர் அரசியல் இயக்கத்துக்கு மட்டுமே சொந்தமானதல்ல, மாறாக, இந்நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களுக்குமானது. ஆட்சியைத் தேர்ந்தெடுத்ததோடு வாக்காளர்களின் பங்கு முடிந்துவிடுவதில்லை.

வழக்கமான அரசியல் கலாசாரத்தில், மக்கள் வாக்களித்து ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துவிட்டு அமைதியாக இருந்துவிடுவார்கள். குறைகளைச் சுட்டிக்காட்டுவதோடு தங்களது கடமை முடிந்துவிட்டதாக நினைப்பார்கள். ஆனால், அதற்கு மாற்றமாக, நாட்டைப் கட்டமைப்பதில் அரசுக்கு நிகரான சம பங்கு பொதுமக்களுக்கும் உண்டு.

திட்டங்களைச் செயற்படுத்தும் பொறுப்பு அரசினுடையது என்றாலும், அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவது மக்களின் பொறுப்பாகும். எனவே, தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'க்ளீன் ஸ்ரீ லங்கா' போன்ற திட்டங்கள் மற்றும் கிராம மட்ட அபிவிருத்திகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதற்கு அரசின் பொறிமுறைகளுடன் பொதுமக்களும் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும். நாட்டைத் தூய்மையாகவும் ஒழுக்கமிக்கதாகவும் மாற்றுவது அரசின் மாத்திரமன்றி, ஒவ்வொருவரின் கடமையாகும் என்றார்.

சிறைக்குள் நாமலுக்கு ஆபத்து - அநுர அரசு எடுத்துள்ள நடவடிக்கை

சிறைக்குள் நாமலுக்கு ஆபத்து - அநுர அரசு எடுத்துள்ள நடவடிக்கை

ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

ஜனாதிபதியின் பாதுகாப்பை பலப்படுத்த கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள்

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US