மே தினத்தினை தாண்டி எமது உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : ஜோன்சன் குற்றச்சாட்டு
மே தினங்கள் கடந்து செல்லுகின்ற பொழுதிலும் தொழிலாளர்களுக்கான உரிமைகள் கிடைக்கப்பெறவில்லை என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசீர்வாதம் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொழிலாளர்கள் போராட்டம்
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு மே தினங்களுக்கும் நாங்கள் சவால்களை விடுகிறோம். ஆனால் எங்களுடைய உரிமைக்குரல்கள் இரத்து செய்யப்படுகிறது.தொடர்ந்து சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உலகம் முழுவதும் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகிறது.
சுத்திகரிப்பு தொழிலாளியாக எந்த மே தின கூட்டத்திலும் சொல்லுவார்கள் அது அத்திவார தொழில் என்று ஆனால் உரிமைகள் எவ்வளவு தூரம் பேணப்படுகின்றது.
கடந்த வாரம் பத்திரிகையில் பார்க்கின்ற பொழுது ஆயிரம் ரூபாய்விற்கு மலையக தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தை மேற்கொண்டு இருந்தார்கள். எங்களுடைய உரிமையை நோக்கி நாங்கள் தொழிற்சங்கமாக பயணிக்கின்ற பொழுது எமக்கான வாய்ப்புகள் தட்டிக் கழிக்கப்படுகன்றது.
எங்களுடைய உரிமை மறுக்கப்படுகிறது. தொழிலாளர் தினத்தினை தாண்டி எமது உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும். அனைத்து அரசியல்வாதிகளும் பணிவுடன் இதனை செயற்படுத்தி பார்க்க வேண்டும்.
தனியார் ஊழியர்கள்
சுத்திகரிப்பு தொழிலாளர்கள் வேலையை தொடர்ந்து மேற்கொள்கின்ற பொழுது அவர்களுக்குரிய பாதுகாப்பு கையுறை முதல் அனைத்து அணிகலன்களும் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளர்களுடைய பிரச்சினைகளை நாங்கள் முன்வைக்கின்ற பொழுது நாங்கள் அரசாங்கத்தின் எதிர் அலைகள் விரோதிகள் என்று கூறுகின்றார்கள். கையுறை முதல் பாதணிகள்வரை ஒழுங்காக ஒரு தொழிலாளிக்கு வழங்கப்பட வேண்டும்.
எங்களுடைய உரிமைகளை எழுத்து மூலமாக அல்லது மகஜராக கொடுத்தால் என்ன பின்னாளில் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவியேற்ற ஒவ்வொருவருடயை செயல்களையும் நீங்கள் பார்க்கின்ற பொழுது அவர்கள் தொழிற்சங்கத்தில் இருந்து உருவாக்கப்பட்டவர்கள்.
ஆனால் அவர்கள் கடந்த நாட்களில் தாங்கள் தலைவர்களாக வருகின்ற பொழுது அவர்கள் தொழிலாளர்களினுடைய உரிமைகளை பெற்றுத்தர அவர்கள் முன் வர வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடப்பதில்லை அரசாங்க ஊழியர்கள் ,தனியார் ஊழியர்கள் என இரண்டு ஊழியர்கள் காணப்படுகின்றோம் .அரசாங்க ஊழியர்களுக்கு , தனியார் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய விடயங்கள் வழங்கப்பட வேண்டும்.
பலவிதமான கோரிக்கைகள்
இன்றும் எமக்கான சம்பள பிரச்சினைகள் காணப்பட்டுக் கொண்டிருக்கின்றது. நாங்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியினையே எதிர் கொண்டு வருகின்றோம். சம்பளங்கள் உயர்தப்படாது இருக்கின்றது.
அரசியல்வாதிகளுக்கு இந்த மே தின காலத்தில் இந்த சம்பள உயர்வினை அடையாளபடுத்துகின்றோம். அடிமை, அடிமைத்தனம், கொத்தடிமை இந்த மூன்று அடிமைத்தனங்களிலிருந்தும் தொழிலாளர்கள் விடுவிக்கப்பட வேண்டும்.
இன்று எத்தனை பேர் படித்து பட்டதாரிகளாக வந்தும் படித்து வேலைகள் இன்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இன்று நாங்கள் சொல்லுகின்ற விடயம் மே தினம் என்பது தொழிலாளர்களுடைய தினம் அது வேறெவருக்கும் உரத்தானது அல்ல.
தொழிலாளர்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் கரிசனை குறைவாகவே உள்ளது. போராட்டம் என்று பலவிதமான கோரிக்கைகளை முன்வைத்து போராடிய பொழுதும் அரசாங்கம் உரிமைகளை இதுவரை தந்ததில்லை. எத்தனையோ தொழிலாளிகள் வயதுகள் சென்றும் தமக்கான நியமனம் இன்றி இன்னும் பணிபுரிகின்றார்கள் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |